மும்பை: இந்தியன் பிரிமியர் லீக்கின் 11வது சீசன் ஏப்ரல் 7ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான வீரர்கள் ஏலம் ஜனவரி 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. அக்சர் படேலை மட்டும் தக்கவைத்திருந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அஸ்வின், ஆரோன் பிஞ்ச், டேவிட் மில்லர், லோகேஷ் ராகுல், கருண் நாயர், மோகித் சர்மா, மனோஜ் திவாரி, யுவராஜ் சிங் போன்ற முக்கிய வீரர்களை ஏலத்தில் எடுத்- தது. இந்நிலையில் நேற்று இணைய உரையாடலின்போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைவராக அஸ்வின் நியமிக்கப்பட்டுள்ளார் என்று சேவாக் அறிவித்தார்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணித் தலைவராக அஸ்வின் நியமனம்
1 mins read

