ஆர்சனலை ஓரங்கட்டிய மான்செஸ்டர் சிட்டி

ஆர்சனலை ஓரங்கட்டிய மான்செஸ்டர் சிட்டி

1 mins read
0acfbf28-e30d-49fc-9ca2-5dea1cb74fdb
-

லண்டன்: நேற்று அதிகாலை நடந்த இங்கிலிஷ் லீக் கிண்ண காற்பந்து இறுதிப்போட்டியில் ஆர்- சனல் குழுவை ஓரங்கட்டி மான்- செஸ் டர் சிட்டி குழு வாகை சூடியது. இதன்மூலம் பெப் கார்டி- யோலா நிர்வாகியாக பொறுப்பேற்- றுக் கொண்டதை தொடர்ந்து மான்செஸ்டர் சிட்டி குழு இந்தப் பருவத்தில் முதல் வெற்றிக் கிண்ணத்தை வென்றுள்ளது. நேற்றைய ஆட்டத்தில் பல மாதங்களுக்குப் பின் அணிக்குத் திரும்பிய மான்செஸ்டர் சிட்டியின் அணித் தலைவர் வின்சென்ட் கொம்பனி தமது திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிபெறச் செய்த தாக பிபிசி செய்தித் தகவல் கூறுகிறது. அவர் மான்செஸ்டர் சிட்டி எல்லையின் கோல் எல்லைக்குள் ஆர்சனலின் தாக்குதல் ஆட்டக் காரரான ஓபாமாயாங் என்பவரை கோல் போட விடாமல் அனாயாச மாக தடுத்து தமது அணியைக் காப்பாற்றினார். பின்னர், மான்செஸ்டர் சிட்டியின் இரண்டா வது கோலை போட்டு போட்டியை கிட்டத்தட்ட ஒரு மு-டிவுக்குக் கொண்டுவந்ததாக புகழாரம் சூட்டப்படுகிறது.

நேற்றைய ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டியின் இரண்டாவது கோலை அதன் தலைவர் வின்சன்ட் கொம்பனி போட்டதை மகிழ்ச்சி பொங்கக் கொண்டாடும் செர்ஜியோ அகுவேரோ. படம்: ராய்ட்டர்ஸ்