கேப்டவுன்: தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல். 33 வயதாகும் இவர் கடந்த 2006ஆம் ஆண்டில் இருந்து தென்னாப்பிரிக்க அணிக்காக விளையாடி வருகி றார். மொத்தம் 83 டெஸ்ட், 117 ஒருநாள் மற்றும் 44 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார். நாளை தொடங்கவுள்ள நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்குப் பிறகு அனைத்துலகப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். குடும்ப நலனை முன்னிட்டு இம்முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறினார்.
ஓய்வுபெறுகிறார் மோர்னே மோர்கல்
1 mins read

