புதுடெல்லி: விஜய் ஹாசரே கிரிக் கெட் கிண்ணத்திற்கான இறுதிப் போட்டியில் கர்நாடகா, சௌராஷ் டிரா அணிகள் மோதின. டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்று நடந்த இந்தப் போட்டியில் முதலில் பந் தடித்த கர்நாடகா அணி 50 ஓவர் முடிவில் 253 ஓட்டங்கள் குவித் தது. அதிகபட்சமாக மயங்க் அகர்வால் 90 ஓட்டங்கள் எடுத் தார். பின்னர், 254 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் சௌராஷ்டிரா அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இரு வரும் 15 ஓட்டங்கள் எடுப்பதற் குள் விக்கெட்டைப் பறிகொடுத் தனர். இறுதியில், சௌராஷ்டிரா அணி 46.3 ஓவரில் 212 ஓட் டங்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தது. இதனால் கர்நாடகா அணி 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கிண்ணத்தைத் தட்டிச்சென்றது.
விஜய் ஹசாரே கிண்ணம் வென்றது கர்நாடகா
1 mins read

