'ஆர்சனலின் வெற்றிக்கு வழி வகுக்கும் நிர்வாகி தேவை'

'ஆர்சனலின் வெற்றிக்கு வழி வகுக்கும் நிர்வாகி தேவை'

1 mins read
00c5c6ff-609c-4ac1-8322-6c6d55cd86f4
-
Google News Preferred Icon

லண்டன்: தற்போதைய பருவத் திற்குப் பிறகு ஆர்சனல் காற் பந்துக் குழுவின் நிர்வாகியாக வெங்கர் நீடிப்பதற்கு எந்தக் கார ணமும் இல்லை என்று கூறியுள் ளார் அக்குழுவின் முன்னாள் வீரர் இயன் ரைட். வெங்கர் நிர்வாகியாகப் பதவி வகித்த கடந்த 21 பருவங்களிலும் தன் குழுவை முதல் நான்கு இடங் களுக்குள் ஒன்றாகவோ அல்லது ஏதாவது கிண்ணத்தையோ வெல் லும் வகையில் வழி நடத்தினார். ஆனால், தற்போதைய இங்கி லிஷ் பிரிமியர் லீக் தொடரில் இன்னும் 10 ஆட்டங்களே எஞ்சி உள்ள நிலையில், பட்டியலில் 6வது இடத்தில்தான் உள்ளது ஆர்சனல். இது மட்டுமல்லாமல், நேற்று முன்தினம் அதிகாலை நடந்த இங்கிலிஷ் லீக் கிண்ணத்திற்கான இறுதிப் போட்டியில் மான்செஸ்டர் சிட்டியிடம் தோற்று கிண்ணத்தை வெல்லும் வாய்ப்பையும் அக்குழு நழுவவிட்ட நிலையில், வெங்கரின் பதவிக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இங்கிலிஷ் லீக் கிண்ண இறுதிப் போட்டியில் மான்செஸ்டர் சிட்டிக்கு எதிராக மாற்று ஆட்டக்காரரைக் களமிறக்கிய வெங்கரால் (வலமிருந்து 2வது) வெற்றியை ருசிக்க முடியவில்லை.

படம்: ராய்ட்டர்ஸ்