தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு விரைவில் சம்பள உயர்வு

1 mins read

மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான சம்பளத்தை அதிகரிக்கக் கோரி அணித் தலைவர் விராத் கோஹ்லி, டோனி, பயிற்றுவிப்பாளர் ரவிசாஸ்திரி ஆகியோர் கிரிக்கெட் வாரிய நிர்வாகக் குழுவிடம் வேண்டுகோள் விடுத்து இருந்தனர். இந்நிலையில் சம்பள ஒப்பந்தம் குறித்து வாரிய நிர்வாகிகள் உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகத்தினருடன் ஆலோசனை நடத்தினர். இதன்படி வீரர்களுக்குச் சம்பள உயர்வு ஒப்பந்தத்திற்கு கிரிக்கெட் வாரியம் இணங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் நடைபெறும் 3 நாடுகளுக்கு இடையேயான 20 ஓவர் போட்டியில் விளையாடுவதற்காக நாளை புறப்படவிருக்கிறது. அதற்கு முன்பு இந்திய கிரிக்கெட் வீரர் களுக்கான சம்பள உயர்வு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'ஏ', 'பி' மற்றும் 'சி' கிரேடு அடிப்படையில் வீரர்கள் தரம் பிரிக்கப்படுவார்கள். தேர்வுக்குழுவின் தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத்துதான் வீரர்களைத் தரம் பிரித்து உள்ளார். 'ஏ' கிரேடு வீரர்களின் சம்பளம் ரூ.12 கோடியைத் தாண்டும் என்று கூறப்படுகிறது.