இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி எப்போதும் ஆவேசமான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடிய வர். அதேபோல் மைதானத்திலும் ஆவேசமாகச் செயல்படுவார். அணி வீரர்களும் அதேபோல் செயல்பட வேண் டும் என்று விரும்புவார். விராத் கோஹ்லி தனது ஆவேசத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும். அப்போது தான் தனது அணித் தலைவருக்கான திறனை வளர்த்துச் சிறப் பாக செயல்பட முடியும் என்று முன்னாள் வீரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
தென்னாப்பிரிக்கத் தொடரில் விராத் கோஹ்லியின் செயல்பாடு குறித்து ஆஸ் திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் வாக் கருத்துத் தெரி வித் துள்ளார். அப்போது தென்னாப் பிரிக் கா வில் விராத் கோஹ்லி காட் டிய ஆவேசம் சற்று அதிகம் எனக் குறிப்பிட்டுள்ளார். விராத் கோஹ்லி குறித்து ஸ்டீவ் வாக் கூறுகையில் "தென்னாப் பிரிக்கத் தொடரின்போது நான் விராத் கோஹ்லியைப் பார்த்தேன். அவரது ஆவேசம் கொஞ்சம் அதிகமாக இருந்ததாக உணர்கி றேன். ஆனால், அணித் தலைவர் பதவியில் கற்றுக்கொண்டுள்ளார். "தன்னை ஒரு தலைவராக இன்னும் அவர் மேம்படுத்திக் கொண்டு வருகிறார். சில மகிழ்ச் சி யான நேரங்களில் உணர்ச்சிவசப் பட்டு விடுகிறார். இருப்பினும், அவருக்கென உரித்தான பாணி யில் அவர் விளையாடு கிறார்.
"ஆவேசப் போக்கை சில நேரங்களில் அதிகமாக வெளிப்படுத்த வேண்டும். சில நேரங்களில் குறைவாக வெளிப் படுத்த வேண்டும். எந்த நேரத்தில் எது சரியானது என்பதை அறிந்து கொள்வது தேவையானது. "இந்திய அணியின் மிகப்பெரிய நம்பிக்கையாக விராத் கோஹ்லி உள்ளார். அனைத்து வகைக் கிரிக் கெட்டிலும் நம்பர் ஒன் அணியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். தற்போது அது மிகவும் கடினம்," என் றார் ஸ்டீவ் வாக்.

