எஸ்பான்யோல்: ஸ்பெயினின் லா லீகா காற்பந்துப் போட்டிகளில் கடந்த ஐந்து ஆட்டங்களில் வெற்றி பெற்று வந்த ரியால் மட்ரிட் நேற்று அதிகாலை எஸ்பான்யோல் குழுவைச் சந்தித்தது. ஆனால், இம்முறை அது கூடுதல் நேரத்தில் எதிரணியை கோல் போட விட்டு ஆட்டத்தை 0-=1 என தோல்வியைத் தழுவியது. அந்த கோலை எஸ்பான்யோலின் ஜெரார்ட் மொரேனோ என்பவர் ஆட்டம் முடியும் தறுவாயில் 93ஆம் நிமிடத்தில் போட்டார். கடந்த ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மதமதப்பில் இருந்த ரியால் குழு தனது நட்சத்திர ஆட்டக்காரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவைக் களத்தில் இறக்கவில்லை. அதற்கான விலையை அது ஆட்ட முடிவில் கொடுக்க வேண்டி யதாயிற்று.
நேற்றைய ஆட்டத்தில் ரியாலைவிட எஸ்பான்யோல் அணி முனைப்புடன் விளையாடிய தாகவும் முதல் பாதி ஆட்டத்தில் மொரேனோ போட்ட கோலை நடுவர் 'ஆஃப் சைட்' எனக் கூறி தடுத்துவிட்டதாகவும் பிபிசி செய்தித் தகவல் விளக்கியது. ரியாலின் தற்காப்பு ஆட்டக் காரரான செர்ஜியோ ரமோஸ் இறுதிக் கட்டத்தில் கூடுதல் தாக்குதல் ஆட்டக்காரராக கள மிறக்கப்பட்டாலும் அது பலனளிக்கவில்லை. இது பற்றிக் கருத்துரைத்த ரியாலின் நிர்வாகியான ஸிடான், "ஆட்டம் முடியும் தறுவாயில் 0-0 என்ற சமநிலை தொடரும் நிலை யில் எதுவும் நடக்கலாம். "எனவே, எப்போதும்போல் வெற்றிபெற எண்ணம்கொண்டு செயல்பட்டோம். ஆனால், முடிவு வேறுவிதமாக இருந்தது. "கடைசி நேரத்தில் அவர்கள் ஒரு கோல் போட்டனர். அது குறித்து மீண்டும் மீண்டும் பேசத் தேவையில்லை. "நாங்கள் வெற்றி பெற அரு கதையில்லை, தோல்வியடைந்தி ருக் கவும் வேண்டிய தில்லை. "அணிக்கு பல புது வீரர்கள் தேவைப்படுகின்றனர்.
படம்: நேற்றைய போட்டியில் எஸ்பான்யோல் அணியின் சார்பாக கோல் போடும் ஜெரார்ட் மொரேனோ. ஏஎஃப்பி

