பாகிஸ்தான் வீரருக்குத் தடை

பாகிஸ்தான் வீரருக்குத் தடை

1 mins read

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ஷஸைப் ஹசனுக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. 28 வயதான ஹசன் கடந்த ஆண்டு நடந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் தொட ரின்போது 'ஸ்பாட் ஃபிக்சிங்' சூதாட்டத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. அவருக்கு ஒரு மில்லியன் பாகிஸ்தான் ரூபாய் (S$9,050) அபராதமும் விதிக்கப் பட்டது. 2009ல் டி20 உலகக் கிண்ணம் வென்ற பாகிஸ்தான் அணியில் ஹசன் இடம்பெற்று இருந்தார்.