இடைவெளியை குறைத்த அட்லெட்டிகோ

இடைவெளியை குறைத்த அட்லெட்டிகோ

1 mins read

மட்ரிட்: ஆன்டோய்ன் கிரீஸ்மன் நான்கு கோல்களை அடிக்க, ஸ்பானிய லா லீகா காற்பந்து ஆட்டம் ஒன்றில் அட்லெட்டிகோ மட்ரிட் குழு 4=0 என்ற கணக்கில் லெகானெஸ் குழுவை மண்ணைக் கவ்வ வைத்தது. அட்லெட்டிகோ குழு தொடர்ச் சியாக வென்ற எட்டாவது ஆட்டம் இது. இதன்மூலம் 65 புள்ளிகளுடன் பட்டியலின் முதல்நிலையில் உள்ள பார்சிலோனாவுக்கும் இரண்டாம் இடத்தில் இருக்கும் அட்லெட்டி கோவுக்கும் இடையிலான புள்ளி வித்தியாசம் நான்காகக் குறைந்து உள்ளது. இருந்தபோதும் இன்று அதி காலை லாஸ் பால்மாஸ் குழுவிற் கெதிரான ஆட்டத்தில் பார்சி லோனா வென்றிருந்தால் புள்ளி வித்தியாசம் மீண்டும் ஏழாக உயர்ந்திருக்கும். நாளை மறுநாள் நடக்கவுள்ள மிக முக்கியமான ஆட்டத்தில் பார்சிலோனாவை அதனுடைய நூ காம்ப் விளையாட்டரங்கில் எதிர் கொள்கிறது அட்லெட்டிகோ.