ஸ்பர்ஸ் கோல் வேட்டை

ஸ்பர்ஸ் கோல் வேட்டை

1 mins read
71692f81-c22e-4f42-a6b9-08404ade8e9e
-

லண்டன்: ஸ்பானிய ஆட்டக்காரர் ஃபெர்னாண்டோ லோரென்டே மூன்று கோல்களையும் தென் கொரியாவின் சன் ஹியூங் மின் இரண்டு கோல்களையும் அடிக்க, எஃப்ஏ கிண்ண ஐந்தாம் சுற்று மறுஆட்டத்தில் டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழு 6-1 என்ற கோல் கணக்கில் ரோச்டேல் குழுவைப் பந்தாடியது. ஆட்டத்தில் ஸ்பர்ஸ் குழுவின் கை ஓங்கியபோதும் 'காணொளி உதவி நடுவர்' தொழில்நுட்பத்தை அடிக்கடி பயன்படுத்தியது சர்ச்சை யைக் கிளப்பியதுடன் ரசிகர்களை யும் சோர்வடையச் செய்தது. ஆட்டத்தின் 23வது நிமிடத்தில் சன் ஹியூங் மின் புகுத்திய கோல் மூலம் ஸ்பர்ஸ் குழு முன்னிலை பெற்றது.

ஆயினும் அடுத்த எட்டு நிமிடங்களில் பதில் கோலடித்து ஆட்டத்தைச் சமனுக்குக் கொண்டு வந்தார் ரோச்டேல் ஆட்டக்காரர் ஹம்ப்ரிஸ். பிற்பாதியில் லோரென்டே 'ஹாட்ரிக்' கோலடிக்க, சன் தன் பங்கிற்கு மேலும் ஒரு கோலை அடித்தார். ஆட்டம் முடியும் தரு ணத்தில் கோலடித்து, ஸ்பர்சின் கோல் வேட்டையை முடித்து வைத் தார் கைல் வாக்கர் பீட்டர்ஸ்.

ரோச்டேல் குழுவிற்கெதிரான எஃப்ஏ கிண்ண ஐந்தாம் சுற்று ஆட்டத்தில் டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழுவின் முதல் கோலை அடிக்கும் சன் ஹியூங் மின் (நடுவில்). படம்: ஏஎஃப்பி