மும்பை: அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற வேண்டும். அதற்கு அணித் தலைவர் விராத் கோஹ்லியின் ஆவேசம் கொஞ்சமும் குறையாமல் இருக்க வேண்டும். அதே போல் டோனியின் அமைதியும் அவசியம் வேண்டும் என்று கூறியிருக்கிறார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் கபில்தேவ். "அணியில் உள்ள எல்லா வீரர்களும் ஆவேசத்தைக் காட்டினாலும் சிக்கல். அனை வரும் அமைதியாக இருந்தாலும் சரிவராது. எனவே கோஹ்லி யின் ஆவேசமும் டோனியின் அமைதியும் சம அள வில் இருந்தால் பலன் கிடைக்கும். டெண்டுல்கர், ராகுல், சேவாக், லட்சுமணன் ஆகிய வீரர்கள் ஓய்வுபெற்ற பிறகு அணி மீண்டும் எழுச்சி பெற்று சிறப்பாக விளையாடி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது," என்றார் கபில்தேவ்.
'உலகக் கிண்ணத்தை வெல்ல ஆவேசமும் அமைதியும் தேவை'
1 mins read

