தொடர் தோல்விகளை சந்திக்கும் ஆர்சனல் குழு

தொடர் தோல்விகளை சந்திக்கும் ஆர்சனல் குழு

1 mins read

லண்டன்: கடந்த ஞாயிறன்று லீக் கிண்ண காற்பந்தின் இறுதிப் போட்டியில் 0=3 என்ற கோல் எண்ணிக்கையில் தோல்வியைத் தழுவிய ஆர்சனல் நேற்று அதிகாலை நடைபெற்ற பிரிமியர் லீக் போட்டி ஒன்றில் மீண்டும் அதே கோல் எண் ணிக்கையில் அதே மான்செஸ் டர் சிட்டியிடம் தோல்வியடைந்தது. லீக் கிண்ணத்தை காற்றில் பறக்கவிட்ட ஆரசனல் நேற்றைய ஆட்டத்திலாவது தனது திறமையை வெளிப்படுத்துமா என ஆவலுடன் காத்திருந்த அதன் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆட்டத்தின் 15ஆம் நிமிடத்தில் சிட்டியின் பெர்னார்டோ சில்வா கோல் வேட்டையை தொடங்கினார். லீரோய் சானே கொடுத்த பந்தை தமது இடது காலால் உதைத்து அதை கோல் வலைக் குள் மிக அழகாக புகுத்தினார்.

பின்னர் 28ஆம் நிமிடத்தில் டாவிட் சில்வா இரண்டாவது கோலை போட, ஐந்து நிமிடங்கள் கழித்து சானே மூன்றாவது கோலை போட்டு ஆர்சனலை மீளாத் துயரில் ஆழ்த்தினார். இரண்டாம் பாதி ஆட்டத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி ஆட்டத்தின் போக்கை மாற்றக் கிடைத்த வாய்ப்பை ஆர்சனல் வீணடித்தது. ஆர்சனலின் ஓபாமயாங் அடித்த பந்தை மான்செஸ்டர் சிட்டி கோல்காப்பாளர் எடர்சன் தடுத்து சிட்டி அணியைக் காப்பாற்றினார். அதன்பிறகு ஆர்சனல் குழுவால் மீண்டு வர முடியவில்லை. இதுபற்றி கருத்துரைத்த ஆர் சனல் நிர்வாகி ஆர்சின் வெங்கர், "தன்னம்பிக்கை குறைந்த நிலையில் விளையாடினோம். அதை ஆட்டத்தின் தொடக்கத்தி லேயே நீங்கள் கண்டிருக்கலாம். அதற்கான பலனை அனுபவித் தோம்," என்று கூறினார்.