புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் ஜூனியர் கிரிக்கெட் தேர்வுக் குழுத் தலைவருமான வெங்கடேஷ் பிரசாத் திடீரெனப் பதவி விலகி உள்ளார். அவர் பதவியில் இருந்தபோது இந்திய ஜூனியர் அணி உலகக் கிண்ணத்தை வென்றது குறிப் பிடத்தக்கது. இந்நிலையில், வெங்கடேஷ் தமது தலைவர் பதவியிலிருந்து விலகப் போவதாக நேற்று முன்தினம் அறிவித்தார். பதவி விலகலுக்கான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை. தனிப்பட்ட காரணத்திற்காக அவர் பதவி விலகுகிறார் எனக் கூறப்படுகிறது. கிரிக்கெட்டில் வேறு பொறுப்பை ஏற்பதற்காக வெங்கடேஷ் பதவி விலகி இருப்பதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தலைவர் சி.கே.கன்னா தெரிவித்துள்ளார்.
இந்திய ஜூனியர் கிரிக்கெட் தேர்வுக் குழுத் தலைவர் விலகல்
1 mins read

