லண்டன்: நடப்பு இங்கிலிஷ் பிரி மியர் லீக் காற்பந்துப் பருவத்தில் லிவர்பூல் குழு முதன்முறையாக இரண்டாமிடத்திற்கு முன்னேறி இருக்கிறது. லிவர்பூலுக்குச் சொந்தமான ஆன்ஃபீல்ட் விளையாட்டரங்கில் நேற்றுப் பின்னிரவில் நடந்த ஆட்டத்தில் அக்குழு 2-0 என்ற கோல் கணக்கில் நியூகாசல் யுனைடெட்டை வீழ்த்தியது. இதன்மூலம் ஆன்ஃபீல்ட் விளை யாட்டரங்கில் நியூகாசல் குழுவின் வெற்றி ஏக்கம் தொடர்கிறது. அந்த அரங்கில் லிவர்பூல் குழுவை எதிர்த்தாடிய கடைசி 22 முறையும் நியூகாசலால் வெற்றிபெற முடிய வில்லை.
ஆன்ஃபீல்ட் அரங்கில் கடைசி யாக 1994 ஏப்ரலில் மோதிய ஆட் டத்தில்தான் நியூகாசல் குழுவிடம் லிவர்பூல் தோற்றிருந்தது. ஆட்டத்தின் முதல் 40 நிமிடங் களில் லிவர்பூல் வீரர்கள் கோல் போடவிடாமல் தடுத்தாடிய நியூ காசல் குழுவினர், அதன்பின் இழைத்த தவற்றால் பின்னடை வைச் சந்திக்க நேர்ந்தது. அவ்வாய்ப்பைப் பயன்படுத்தி சாடியோ மானே அடித்த கோலால் 1=0 என்ற முன்னிலையுடன் இடை வேளைக்குச் சென்றது லிவர்பூல். இந்தப் பருவத்தில் லிவர்பூல் குழுவின் நட்சத்திர நாயகனாக உயர்ந்திருக்கும் முகம்மது சாலா இந்த ஆட்டத்திலும் தன் பங்கிற்கு ஒரு கோலை அடித்தார். 55வது நிமிடத்தில் அவர் புகுத்திய கோலால் லிவர்பூலின் வெற்றி உறுதியானது.

