மட்ரிட்: காற்பந்து உலகில் முன்னணி ஆட்டக்காரர்களில் ஒருவராகத் திகழ்ந்துவரும் போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ இன்னொரு சாதனைக்கும் சொந்தக்காரர் ஆகியுள்ளார். ரியால் மட்ரிட் குழுவிற்காக விளையாடிவரும் ரொனால்டோ, நேற்று அதிகாலை கெடாஃபே குழுவிற்கெதிரான ஆட்டத்தில் இரு கோல்களை அடித்தார். இதன்மூலம் ஸ்பானிய லீக்கில் குறைந்த ஆட்டங்களில் (286 ஆட்டங்கள்) 300 கோல்களை அடித்தவர் என்ற சாதனையை நிகழ்த்தினார். இந்த ஆட்டத்தில் ரியால் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஸ்பானிய லீக்கில் ஆக அதிகமாக இதுவரை 372 கோல்களை அடித்துள்ளார் பார்சிலோனாவின் மெஸ்ஸி.
அதிவேகமாக 300 கோல்கள்
1 mins read

