இத்தாலி ஆட்டக்காரர் திடீர் மரணம்; காற்பந்து உலகம் அதிர்ச்சி

இத்தாலி ஆட்டக்காரர் திடீர் மரணம்; காற்பந்து உலகம் அதிர்ச்சி

1 mins read
9262679a-fa2f-40ff-9a4f-619040208e59
-

ரோம்: இத்தாலி காற்பந்து ஆட்டக் காரரான டாவிடே அஸ்டோரி (படம்) மாரடைப்பால் திடீரென மரணமடைந்தது காற்பந்து உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு வயது 31. தற்காப்பு ஆட்டக்காரரான அஸ்டோரி, இத்தாலி லீக் குழுக் களில் ஒன்றான ஃபியோரென் டினாவின் தலைவராகச் செயல் பட்டு வந்தார். நேற்று முன்தினம் உடினேச குழுவுடன் ஃபியோரென்டினா மோதவிருந்தது. அதற்காக உடினே நகரில் உள்ள ஒரு ஹோட்டலில் ஃபியோரென்டினா ஆட்டக்காரர் கள் தங்கியிருந்தனர். இந்நிலையில், தமது ஹோட்டல் அறையில் அஸ்டோரி மாண்டு கிடக்கக் காணப்பட்டார். மார டைப்பு காரணமாக தூக்கத்திலேயே இவரது உயிர் பிரிந்ததாக இத்தா லிய ஊடகங்கள் கூறின. "திடீர் உடல்நலக்குறைவு கார ணமாக டாவிடே அஸ்டோரி மரணமடைந்துவிட்டார். இதனால் ஒட்டுமொத்தக் குழுவும் அதிர்ச்சி யில் ஆழ்ந்துள்ளது," என்று தனது டுவிட்டர் பக்கத்தில் ஃபியோரென் டினா குழு பதிவிட்டுள்ளது.