'மெஸ்ஸியே காரணம்'

'மெஸ்ஸியே காரணம்'

1 mins read
c31ed677-7ee8-4a1f-ad03-8e746bacaf0b
-

மட்ரிட்: பார்சிலோனா காற்பந்துக் குழுவின் நூ காம்ப் விளையாட்டரங்கில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஸ்பானிய லீக் ஆட்டத்தில் அக்குழு 1=0 என்ற கோல் கணக்கில் அட்லெட்டிகோ மட்ரிட் குழுவைத் தோற்கடித்தது. ஆட்டத்தின் 26வது நிமிடத்தில் கிடைத்த 'ஃபிரீ கிக்' வாய்ப்பின்மூலம் அற்புதமாக கோலடித்து பார்சிலோனாவின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தார் நட்சத்திர ஆட்டக்காரரான லயனல் மெஸ்ஸி. தொழில்முறை காற்பந்து ஆட்டக்காரராக மெஸ்ஸி அடித்த 600வது கோல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றியின்மூலம் இரண்டாம் இடத்திலுள்ள அட்லெட்டிகோவைவிட எட்டுப் புள்ளிகள் முன்னிலையுடன் தனது முதல் நிலையை வலுவாக்கிக்கொண்டுள்ளது பார்சிலோனா. ஆட்டத்திற்குப் பின் பேசிய அட்லெட்டிகோ நிர்வாகி டியேகோ சிமியோனி, "பார்சிலோனாவிற்கும் எமது குழுவிற்கும் இடையிலான ஒரே வித்தியாசம் மெஸ்ஸிதான். அவர் மட்டும் இல்லையெனில் எங்களால் ஆட்டத்தில் வெற்றி பெற்றிருக்க முடியும்," என்று வானளாவப் புகழ்ந்தார்.