டர்பன்: தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 118 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 351, தென் ஆப்பிரிக்கா 162 ஓட்டங்களை எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலியா 227 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, தென்னாப்பிரிக்க அணிக்கு 417 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. மார்க்ரம் 143 ஓட்டங்களைக் குவித்த போதும் அந்த அணி 298 ஓட்டங்களுக்கே ஆட்டமிழந்தது. ஒன்பது விக்கெட்டுகளைக் கைப்பற்றிய மிட்செல் ஸ்டார்க் ஆட்ட நாயகனானார்.
வாகை சூடியது ஆஸ்திரேலியா
1 mins read

