மும்பை: இந்தியாவின் உள்நாட்டு போட்டியில் விளையாடும் ரஞ்சி கிரிக்கெட் வீரர்களுக்கு பிசிசிஐ கடந்த இரண்டு பருவங்களாக சம்பளம் வழங்கவில்லை என்று 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஊடக செய்தி தெரிவிக்கிறது. சில வீரர்களுக்கு மாநில கிரிக்கெட் சங்கங்கள் குறைந்த அளவுத் தொகை மட்டும் கொடுத்துள்ள நிலையில், பிசிசிஐ யின் ஆண்டு வருமானத்தில் இருந்து கிடைக்க வேண்டிய பங்கு யாருக்கும் கிடைக்க வில்லை.
"புதிய நிர்வாகக் குழு அமைக் கப்பட்ட பிறகு, ஆண்டு பொதுக் குழுக் கூட்டம் நடைபெறவில்லை. இதனால் கணக்கு வழக்குகள் சரிபார்க்கப்படாத நிலையில், வீரர் களுக்கு வழங்கப்பட வேண்டிய சம்பளம் தாமதமாகிறது," என்று அதிகாரி ஒருவர் கூறினார். இதற்கிடையே, லோதா குழு பரிந்துரைகளைச் செயல்படுத்து வதில் இருக்கும் இழுபறி நிலை யும் இந்த தாமதத்திற்கு காரண மாக இருக்கலாம் என்றும் கூறப் படுகிறது. ஒரு சில மாநில சங்கங்கள் தாங்கள் கொடுக்க வேண்டிய சம் பளத்தை வீரர்களுக்கு கொடுத்து விட்ட நிலையில், பிசிசிஐ தர வேண்டிய தொகைக்காக ரஞ்சிக் கிண்ண வீரர்கள் காத்திருக்கின்றனர்.

