லண்டன்: காற்பந்து விளையாட்டில் கடைசி நேர வெற்றிக்கு கொஞ்சம் அதிர்ஷ்டமும் கைகொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் மான்செஸ்டர் யுனைடெட் குழுவின் நிர்வாகி மொரின்யோ. கிரிஸ்டல் பேலஸ் குழுவிற்கு எதிரான இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டத்தில் கூடுதல் நேரத்தின் போது மேன்யூ வீரர் நிமன்யா மாட்டிச் போட்ட கோல் தான் அக்குழுவிற்கு மூன்று புள்ளிகளையும் பெற்றுத் தந்தது. முற்பாதி ஆட்டத்திலேயே இரண்டு கோல்கள் போட்டு முன்னிலை பெற்றிருந்தது பேலஸ். ஆனால், மேன்யூவோ 55வது நிமிடத்தில் தான் முதல் கோலைப் போட்டது. ஸ்மாலிங் போட்ட அந்தக் கோலை தொடர்ந்து 76வது நிமிடத்தில் லுக்காகு இன்னோர் கோல் போட்டார். இதனால் ஆட்டம் 2=2 எனச் சமநிலையில் இருந்தபோது, காயம் பட்டதற்கான கூடுதல் நேரம் விளையாடப்பட்டது.
கடைசி நிமிட கோல் தந்த வெற்றியை கொண்டாடும் மான்செஸ்டர் யுனைடெட் வீரர்கள். படம்: ராய்ட்டர்ஸ்

