வார்னர்=டி காக் இடையே முற்றிய மோதல்

வார்னர்=டி காக் இடையே முற்றிய மோதல்

1 mins read
6e28decf-e234-4cbc-90e1-68855e06a4be
-

டர்பன்: ஆஸ்திரேலியா-தென்னாப் பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காவது நாள் ஆட்டத்தில் டேவிட் வார்னர், குயின்டான் டி காக் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஆஸ்திரேலிய அணித் துணை தலைவர் வார்னர், தென்னாப்பிரிக்க அணியின் விக்கெட் காப்பாளர் டி காக் இருவரும் கடுமையான வாய்ச்சண்டையில் ஈடுபட்டது கண்காணிப்பு கேமராவில் பதி வான காட்சிகள் மூலம் தெரிய வந்துள்ளது.

அதில், இப்போட்டியின் தேனீர் இடைவேளையின்போது வீரர்கள் ஓய்வு அறைக்கு செல்லும் வழியில் வார்னர் கடும் கோபத்தோடு, டி காக்கை அடிக்க பாய்ந்ததும் அவர் களுக்குள் வாய்த் தகராறு மூண்ட தும் பதிவாகி உள்ளது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் இதுபற்றி கருத்துத் தெரிவிக் கையில், "டேவிட் வார்னரின் மனைவி பற்றி, டி காக் திட்டியதால் தான் இந்தப் பிரச்சினை உருவா னது," என்று கூறப்படுகிறது. இதேபோல் தென்னாப்பிரிக்க ஊடகங்கள், முதலில் வார்னர் தான் டி காக்கின் தனிப்பட்ட விஷ யங்கள் பற்றி பேசி திட்டியதாக செய்தி வெளியிட்டுள்ளன. அதற்குப் பதிலளிக்கும் வகையில் தான் டி காக் பேசினார் என்றும் கூறப்படுகிறது.

வார்னர், டி காக் இடையே நடந்த வாய்த்தகராற்றின் போது பதிவான காணொளியில் இருந்து எடுக்கப்பட்ட காட்சி. படம்: ஊடகம்