கொழும்பு: முத்தரப்பு டி20 கிரிக் கெட் தொடரின் முதல் போட்டியில் இலங்கையிடம் தோற்றதை அடுத்து, தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்வோம் என்று இந்திய அணித்தலைவர் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். மூன்றாவது அணியாக பங்ளா தேஷ் கலந்துகொள்ளும் முத்தரப்பு டி20 தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. விராத் கோஹ்லி, டோனி, புவனேஸ்வர், பும்ரா, பாண்டியா என முன்னணி ஆட்டக்காரர் களுக்கு ஓய்வு அளிக்கப்பட, ரோகித் சர்மா தலைமையில் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி இத்தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்திய, இலங்கை அணிகள் மோதின. பூவா தலையாவில் வென்ற இலங்கை அணி, முதலில் இந்திய அணியைப் பந்தடிக்க அழைப்பு விடுத்தது. இதையடுத்து, இந்திய அணி யின் தொடக்க இணையாக ரோகித்தும் ஷிகர் தவானும் களம் இறங்கினார்.
ரோகித்: பாடம் கற்றுக்கொள்வோம்
1 mins read

