டெய்லர் விளாசல் ஆட்டம்

டெய்லர் விளாசல் ஆட்டம்

1 mins read
0bf44254-2cb3-4e08-adff-d8aecbc448c9
-

டனீடின்: நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ரோஸ் டெய்லருக்கு (படம்) இன்று 33வது பிறந்தநாள். இந்த நன்னாளில் மற்றவர்கள் பரிசு தரு கிறார்களோ இல்லையோ, தனக் குத்தானே சிறந்த பரிசை டெய்லர் அளித்துக்கொண்டார். இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் டெய்லர் இறுதி வரை களத்தில் நின்று 181 ஓட்டங்களை விளாச, நியூசிலாந்து அணி ஐந்து விக்கெட் வித்தியாசத் தில் ஆட்டத்தை வென்று, தொடரை 2-2 எனச் சம நிலைக்குக் கொண்டுவந்தது. ஒருநாள் போட்டிகளில் டெய்லருக்கு இது 19வது சதம். இதுவே இவர் ஒரு போட்டியில் விளாசிய அதிக பட்ச ஓட்டமும்கூட. முதலில் பந்தடித்த இங் கிலாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 335 ஓட்டங்களைக் குவித்தது.

கடினமான இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணிக்குத் தொடக் கம் மிக மோசமாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரர்களான கப்டில், மன்ரோ இருவரும் ஓட்டக் கணக்கைத் தொடங்குவதற்கு முன்பே ஆட்டமிழந்தனர். இருப்பினும், அணித்தலைவர் கேன் வில்லியம்சன் (45), டாம் லேதம் (71) ஆகியோர் டெய்லருக்கு நல்ல ஒத்துழைப்பு அளிக்க, நியூசி லாந்து அணியின் ஓட்டக் குவிப் பில் தொய்வு ஏற்படவில்லை. 109 ஓட்டங்களை எடுத்திருந்த நிலையில் காயமடைந்தபோதும் வலியைப் பொருட்படுத்தாது ஆடி, அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார் டெய்லர். தொடர் யாருக்கு என்பதைத் தீர்மானிக்கும் கடைசிப் போட்டி நாளை மறுநாள் நடக்கவுள்ளது.