ரொனால்டோவால் ஏற்றம் கண்ட ரியால்

ரொனால்டோவால் ஏற்றம் கண்ட ரியால்

1 mins read
be6a4eee-ccf9-4b49-afb1-e677362a7f1f
-

பாரிஸ்: 'மிஸ்டர் சாம்பியன்ஸ் லீக்' என்று பாராட்டும் அளவிற்கு அமைந்துள்ளது நடப்பு ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் பரு வத்தில் கிறிஸ்டியானோ ரொனால் டோவின் செயல்பாடு. பிரான்சின் பிஎஸ்ஜி குழுவிற்கு எதிராக நேற்று அதிகாலை நடந்த காலிறுதிக்கு முந்திய சுற்றின் 2வது ஆட்டத்தில் ரியால் மட்ரிட் குழு 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது. முதல் ஆட்டத்திலும் 3-1 என ரியால் வென்றிருந்ததால் ஒட்டு மொத்த கோல் கணக்கிலும் அக்குழு 5-2 என முன்னிலை பெற்று, தொடர்ந்து எட்டாவது ஆண்டாக காலிறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது. இந்த ஆட்டத்துடன் சேர்த்து, இந்தப் பருவத்தில் ரியால் விளை யாடிய எட்டு சாம்பியன்ஸ் லீக் ஆட்டங்களிலும் ரொனால்டோ கோலடித்து சாதனை படைத்துள் ளார். மொத்தத்தில் அவர் 12 கோல்களைப் போட்டுள்ளார். பிஎஸ்ஜியுடன் மோதிய கால் இறுதிக்கு முந்திய சுற்றின் முதலா வது ஆட்டத்திலும் ரொனால்டோ இரு கோல்களை அடித்திருந்தார்.

பிஎஸ்ஜி குழுவிற்கெதிரான சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் ரியால் மட்ரிட் குழுவின் முதல் கோலைப் புகுத்தும் கிறிஸ்டியானோ ரொனால்டோ (வலது). படம்: ராய்ட்டர்ஸ்