லண்டன்: பெசல் காற்பந்துக் குழுவிடம் தோற்றபோதும் சாம்பி யன்ஸ் லீக் காலிறுதிச் சுற்றுக்கு மான்செஸ்டர் சிட்டி குழு தகுதி பெற்றது. இருந்தாலும் சிட்டி வீரர்களின் செயல்பாடு அக்குழுவின் நிர்வாகி பெப் கார்டியோலாவிற்குப் பெருத்த ஏமாற்றம் தருவதாக அமைந்தது. காலிறுதிக்கு முந்திய சுற்றின் முதல் ஆட்டத்தில் சிட்டி 4-0 என்ற கோல் கணக்கில் பெசலை வீழ்த்தியிருந்தது. இந்த நிலையில், அக்குழுக்களுக்கு இடையிலான இரண்டாவது ஆட்டம் நேற்று அதிகாலை சிட்டியின் எட்டிஹாட் அரங்கில் நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் கெவின் டி பிரய்ன, செர்ஜியோ அகுவேரோ, எடர்சன், டாவிட் சில்வா ஆகிய முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளித்தார் கார்டியோலா. 17 வய தான மத்தியத் திடல் ஆட்டக்காரர் ஃபில் போடன் களமிறக்கப்பட்டார். இதன்மூலம் சாம்பியன்ஸ் லீக் 'நாக் அவுட்' ஆட்டத்தில் விளை யாடிய ஆக இளம் இங்கிலிஷ் வீரர் எனும் பெருமையை அவர் பெற்றார்.
ஆட்டத்தின் எட்டாம் நிமிடத் திலேயே பிரேசில் வீரர் கேப்ரியல் ஜீசஸ் அடித்த கோலால் சிட்டி முன்னிலை பெற்றது. ஆயினும், 17வது நிமிடத்தில் முகம்மது எல்யூனூசி, 71வது நிமிடத்தில் மைக்கல் லாங் ஆகியோர் அடித்த கோல்களால் பெசல் வெற்றி பெற் றது. இருப்பினும், ஒட்டுமொத்த கோல் அடிப்படையில் 5-2 என முன்னிலை பெற்ற சிட்டி காலிறு திக்குள் நுழைந்தது. போட்டி முடிந்தபின் பேசிய கார்டியோலா, "முதல் பாதியில் பல கோல் வாய்ப்புகளை உருவாக்கிய சிட்டி குழுவினர், பிற்பாதியில் தாக்குதல் தொடுக்க, ஏன் எப்படி விளையாடுவது என்பதையே மறந்து விட்டனர். மாறி மாறி பந்தைக் கடத்தினால் மட்டும் பயனில்லை. இரண்டாம் பாதியில் மிக மிக மோசமாக விளையாடினர்," என்று ஆதங்கப்பட்டார். 2016 டிசம்பருக்குப் பின் எட்டி ஹாட் அரங்கில் சிட்டிக்குக் கிட்டிய முதல் தோல்வி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்பர்ஸ் கனவு கலைந்தது
வெம்ப்ளி விளையாட்டரங்கில் நேற்று நடந்த இன்னோர் ஆட்டத் தில் இத்தாலியின் யுவென்டஸ் குழு 2=1 என்ற கோல் கணக்கில் டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழுவை வெற்றி கொண்டது. இக்குழுக்கள் மோதிய முதல் ஆட்டம் 2=2 எனச் சமநிலையில் முடிந்ததால், நேற்றைய ஆட்டத்தில் வென்றால் மட்டுமே காலிறுதிக்குள் நுழைய முடியும் என்ற நிலை.

