ஐந்தாமிடம் பிடித்த இந்தியா

ஐந்தாமிடம் பிடித்த இந்தியா

1 mins read

ஈப்போ: மலேசியாவின் ஈப்போ நகரில் நடந்து வரும் 27வது சுல்தான் அஸ்லான் ஷா கிண்ண ஹாக்கி தொடரில் இந்திய அணி நேற்று அயர்லாந்தை 4-=1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஐந்தாவது இடத்தைக் கைப்பற்றியது. நேற்று முன்தினம் நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் அதே அணியிடம் இந்திய அணி 2=3 என்ற கோல் கணக்கில் தோற்று அதிர்ச்சியளித்தது. இந்திய அணியை அயர்லாந்து வீழ்த்தியது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி கண்ட ஆஸ்திரேலிய அணியும் அடுத்த நிலையிலுள்ள இங்கிலாந்து அணியும் இறுதிப் போட்டியில் நேற்றிரவு மோதவிருந்தது. 2018-03-11 06:00:00 +0800