போர்ட் எலிசபெத்: ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன் றாவது நாள் ஆட்டத்தின் போது டி வில்லியர்ஸ் சதமடித்தார். முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 243 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. தென்னாப்பிரிக்கா அணி சார்பில் ரபாடா ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி னார். பின்னர் நேற்று முன்தினம் தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்சை தொடங்கியது. டீன் எல்கர், ஹசிம் அம்லா அரைசதம் கடந்த நிலையில் வெளியேறினர். அதன்பின் வந்த முன்னணி வீரர்கள் ஆட்டமிழந்த போதிலும் அதிரடி மன்னன் டி வில்லியர்ஸ் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி னார். 2வது நாள் ஆட்ட முடிவில் டி வில்லியர்ஸ் அரைசதம் அடிக்க தென்னாப்பிரிக்கா 7 விக்கெட் இழப் பிற்கு 263 ஓட்டங்கள் எடுத்திருந்தது. அவருடன் பிளாண்டரும் களத்தில் இருந்தார்.
3வது நாள் ஆட்டத்தின்போது பிளாண்டர் 36 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 8வது விக்கெட்டுக்கு இந்த இணை 84 ஓட்டங்கள் எடுத்தது. மறுமுனையில் விளையாடிய டி வில்லியர்ஸ் 109வது ஓவரில் சதம் அடித்தார். இது அவரின் 22வது அனைத்துலக டெஸ்ட் சதமாகும். அதன் பின் களமிறங்கியவர்கள் விரைவில் ஆட்டமிழந்தாலும் டி வில்லியர்சின் சதத்தால் தென்னாப் பிரிக்கா 382 ஓட்டங்கள் எடுத்தது. 126 ஓட்டங்களுடன் டி வில்லியர்ஸ் ஆட்டமிழக்காமல் இருந்தார். 139 ஓட்டங்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி தோல்வியைத் தவிர்க்கும் நோக்கில் விளையாடியது.

