பாகிஸ்தான் செல்கிறது வெஸ்ட் இண்டீஸ்

1 mins read

கராச்சி: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தங்கள் நாட்டில் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இல்லை, உச்சக்கட்ட பாதுகாப்பு வழங்குகிறோம் என்று வேண்டுகோள் விடுத்தும் எந்தவொரு நாடும் பாகிஸ்தான் செல்ல முன்வரவில்லை. நிலைமை இவ்வாறிருக்க, மற்ற நாடுகளுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக கடந்த ஆண்டு பாகிஸ்தான் பிரிமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டியை தங்கள் நாட்டில் வெற்றி கரமாக நடத்திக் காட்டியது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம். இதைத் தொடர்ந்து அடுத்த மாதம் பாகிஸ்தான் சென்று விளையாட வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஒப்புதல் தெரிவித்துள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது. அப்போது அவர்கள் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவார்கள் என்றும் அது கூறியது.