ஜோகோவிச் அதிர்ச்சித் தோல்வி

1 mins read

கலிஃபோர்னியா: ஆஸ்திரேலிய பொது விருது டென்னிஸ் தொடரில் இருந்து கடந்த ஜனவரி மாதம் வெளியேறிய ஜோகோவிச், கலிஃபோர்னியாவில் தற்போது நடந்துவரும் இந்தியன்வெல்ஸ் போட்டிகளில் முதன்முறையாக கலந்து கொண்டார். ஆனால், இதன் இரண்டாவது சுற்றில் 109ஆம் நிலை வீரரான ஜப்பானின் டேரோ டேனியலிடம் 7=6, 4=6, 6=1 என்ற செட் கணக்கில் தோற்ற ஜோகோவிச் தொடரில் இருந்து வெளியேறினார். இன்னோர் போட்டியில் ஃபெட்ரிகோ டெல்போனிசை 6=3, 7=6 என்ற செட் கணக்கில் வீழ்த்திய ஃபெடரர் அடுத்தச் சுற்றுக்கு முன்னேறினார்.