பெங்களூரு: இந்தியன் சூப்பர் லீக் காற்பந்துத் தொடரின் அரையிறுதிப் போட்டியின் இரண்டாவது சுற்றில் புனே, பெங்களூரு அணிகள் மோதின. பெங்களூரு அணியின் சுனில் சேத்தி 'ஹாட்=ரிக்' கோல்போட்டார். ஆனால், புனே அணி ஒரு கோல் மட்டுமே போட்டது. எனவே, பெங்களூரு அணி 3=1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. இன்று நடைபெறவுள்ள சென்னை, கோவா அணிகளுக்கு இடையிலான 2வது சுற்று அரையிறுதி ஆட்டம் பெங்களூரு அணியுடன் இறுதிப் போட்டியில் மோதப்போவது யார் என்பதைத் தீர்மானிக்கும்.
ஐஎஸ்எல்: இறுதிப் போட்டியில் பெங்களூரு
1 mins read

