கோல்கத்தா: எந்தச் சூழ்நிலை யிலும் கணவர் ஷமியுடன் சேர்ந்து வாழ முடியாது என்று அவரது மனைவி ஹசின் ஜஹான் (படம்) திட்டவட்டமாக கூறியுள்ளார். பெண்களுடன் தகாத உறவு, கொடுமைப்படுத்தியது, கொலை முயற்சி உள்ளிட்ட குற்றச்சாட்டு களை இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி மீது அவரது மனைவி சுமத்தினார். இதையடுத்து ஷமி மற்றும் அவரது குடும்பத்தினர் 4 பேர் மீது கொலை முயற்சி உள்பட பல் வேறு பிரிவுகளில் காவல்துறை யினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகி றார்கள்.
இந்த நிலையில் தொலைக் காட்சி ஒன்றிற்குப் பேட்டியளித்த ஷமி மனைவியோடு சமரசம் செய்து கொள்ள விரும்புவதாகக் கூறி னார். அதில், "எனக்கு எதிராகச் சதி நடக்கிறது. எனது மனைவியை யாரோ ஒருவர் தவறாக வழிநடத்து கிறார். "என் மனைவியுடன் சமரசம் செய்துகொள்ளத் தயாராக இருக்கிறேன். மனைவி, மகளுடன் மகிழ்ச்சியாக வாழ நினைக்கிறேன்.
"இந்தச் சர்ச்சையால் நானும்; மனஉளைச்சலுக்கு ஆளாகி உள் ளேன். மேலும் அது என் பயிற்சி யையும் பாதிக்கிறது," என்றார். ஆனால் ஷமியின் சமரசத்தை ஏற்க மறுத்துள்ள ஹசின் ஜஹான், "கடந்த 4 ஆண்டுகளாக அவர் செய்த அனைத்து தவறுகளையும் நான் மன்னித்தேன். "ஆனால் அவரோ தொடர்ந்து தவறுகள் செய்தாரே தவிர திருந்த வில்லை. இனி அவரோடு சமா தானம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. "அவர் செய்த தவறுக்கு என் னிடம் ஆதாரம் இருக்கிறது. அது மட்டும் இல்லாவிட்டால் இந்நேரம் அவர் என்னிடமிருந்து விவாக ரத்து வாங்கியிருப்பார்," என்றார்.

