நெருக்கடியை தகர்த்து டோட்டன்ஹம் வெற்றி

நெருக்கடியை தகர்த்து டோட்டன்ஹம் வெற்றி

1 mins read
872165d6-e0c5-454d-b1ab-908de420c4fc
-

லண்டன்: யுவென்டஸ் காற்பந்துக் குழுவிடம் அடைந்த தோல்வியால் சாம்பியன்ஸ் லீக் தொடரிலிருந்து வெளியேறிய டோட்டன்ஹம் குழு, தற்போது இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது. நேற்று அதிகாலை நடந்த இபிஎல் போட்டியொன்றில் போர்ன் மத்தை 1-4 என வீழ்த்தியதால் முன்னேறியுள்ளது டோட்டன்ஹம். ஆட்டம் தொடங்கிய ஏழாவது நிமிடமே போர்ன்மத் முன்னிலை, அதனை சமன் செய்வதற்குள் காயம் காரணமாக ஹேரி கேன் விலகல் ஆகிய எதிர்மறை நிகழ்வு களால் டோட்டன்ஹம் நெருக் கடியில் சிக்கித் தவித்தது.

ஆனால் 35வது நிமிடத்தில் டெலி அலி எதிரணி வலைக்குள் உதைத்த பந்து போர்ன்மத்தின் கோலைச் சமன் செய்து அக்குழு விற்கு நிம்மதியைத் தந்தது. தொடர்ந்து வெற்றிக்காகப் போராடிய டோட்டன்ஹம்மை 62வது நிமிடத்தில் முன்னிலை பெறச் செய்தார் சன் ஹியூங்=மின். அடுத்த 25 நிமிடங்களுக்குள் அவர் இன்னொரு கோலைப் போட 3-1 என முன்னிலை பெற்றது டோட்டன்ஹம்.

டோட்டன்ஹம் குழுவின் வெற்றியை உறுதி செய்த நான்காவது கோலைப் போட்ட மகிழ்ச்சியில் செர்ஜி அவ்ரியர். படம்: ஏஎஃப்பி