பார்சிலோனா: லயனல் மெஸ்ஸி, லுவிஸ் சுவாரெஸ் போன்ற காற்பந்து வீரர்கள் அபரிமிதமாக இருக்கும் பார்சிலோனா குழுவை சாம்பியன்ஸ் லீக் காற்பந்து தகுதிச் சுற்றின் இரண்டா வது ஆட்டத்தில் இன்றிரவு பின்னேரத்தில் பார்சிலேனா வின் சொந்த மைதானமான நு காம்ப்பில் சந்திக்கிறது இங்கிலாந்தின் செல்சி குழு. சுருங்கச் சொன்னால், சிங் கத்தை அதன் குகையிலேயே சந்திக்கவுள்ளது செல்சி. அந்த சிங்கத்தை வெற்றி கொண்டால்தான் அது அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும்.
ஆனால், செல்சியை கரையேற்றக் கூடிய வீரர் களும் உள்ளனர் என்றால் அது மிகையாகாது. குறிப்பாக, செல்சியின் ஈடன் ஹசார்ட், வில்லியன் போன்றோர் நொடிப் பொழுதில் ஆட்டத்தின் போக்கையே மாற்றக் கூடியவர்கள். ஹசார்ட்டின் அதி அற்புத மான திறன்களால் செல்சி குழுவின் அனைத்து ஆட்டங் களிலும் இவர் இடம் பெறுவது வாடிக்கையாகி விட்டது. இதன் காரணமாகவே பல சமயங்களில் செல்சியின் வெற்றி தோல்வி இவரையே சார்ந்துள்ளது. பார்சிலோனா வில் மெஸ்ஸி சாதித்த அளவுக்கு இவர் சாதிக்க வில்லை என்றபோதிலும், முதல் சுற்றில் லயனல் மெஸ்ஸியை விட திறமையாக விளையாடினா ர் என்று காற்பந்து விமர்சகர்கள் கூறுகின்றனர். அதே அளவு திறமையை ஸ்பெயினிலும் அவரால் வெளிப்படுத்த முடியுமாயின் பார்சிலோனாவுக்கு சிக்கல்தான் என்று இவர்கள் கூறுகின்றனர்.

