கொழும்பு: இந்தியா, இலங்கை மற்றும் பங்ளாதேஷ் ஆகிய 3 நாடுகளுக்கு இடையேயான 20 ஓவர் போட்டி இலங்கையில் நடந்து வருகிறது. கொழும்பில் நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இலங்கை அணியால் 19 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 152 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. பின்னர் விளையாடிய இந்திய அணி 17.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 153 ஓட்டங் கள் எடுத்து 6 விக்கெட் வித்தியா சத் தில் எளிதில் வென்றது. இந்த வெற்றி மூலம் இந்திய அணி ஏற்கெனவே இலங்கையிடம் தோற்றதற்குப் பதிலடி கொடுத்தது. 3 நாடுகள் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட்டில் இலங்கையிடம் தோற்று இருந்தது.
இந்தியாவுக்குக் கிடைத்த இரண்டாவது வெற்றி இதுவாகும். இந்த வெற்றி குறித்து இந்திய அணித் தலைவர் ரோகித் சர்மா (படம்) செய்தியாளர்களிடம் பேசுகையில், "இந்திய வீரர்களின் செயல்பாடு புத்தசாலித்தனமாக இருந்தது. குறிப்பாக பந்துவீச்சாளர் கள் மிக வும் சிறப்பாகச் செயல் பட்டனர். இலங்கை பேட்டிங் வரி சையைத் திணறடித்துக் கட்டுப் படுத்தினர். பனி படர்ந்திருந்த இந்த ஆடுகளத்தில் பந்து வீச்சு சற்று சிரமமான ஒன்றுதான். அதை நமது வீரர்கள் மிகச் சிறப்பாகச் செய்து இலங்கை வீரர்களைத் திணறடித்துள்ளனர். "மனிஷ் பாண்டேயும், தினேஷ் கார்த்திக்கும் பேட்டிங்கில் நன்றாக செயல்பட்டனர். இது ஒரு கூட்டு முயற்சியா கும்," என்றார் ரோகித்.

