மொரின்யோ: தோல்வி ஒன்றும் புதிதல்ல

மொரின்யோ: தோல்வி ஒன்றும் புதிதல்ல

1 mins read
e8c9d0f6-69af-4866-a88d-972a8e1371db
-

மான்செஸ்டர்: சொந்த ஓல்டு டிராஃபர்ட் விளையாட்டரங்கில் நடந்த ஆட்டத்தில் ஸ்பெயினின் செவிய்யா குழுவிடம் 2=1 என்ற கோல் கணக்கில் தோற்று, சாம்பி யன்ஸ் லீக்கின் காலிறுதிச் சுற்றுக்கு முன் னேறும் வாய்ப்பைப் பறிகொடுத்தது மான் செஸ்டர் யுனைடெட் காற்பந்துக் குழு. இதனால் ஏமாற்றமடைந்துள்ள அந்தக் குழுவின் ரசிகர்கள், "சாம்பியன்ஸ் லீக்கில் தோற்று வெளியேறுவது யுனைடெட்டுக்கு ஒன்றும் புதிதல்ல," என்று நிர்வாகி ஜோசே மொரின்யோ கூறியதைக் கேட்டு அதிர்ச்சி யில் ஆழ்ந்துள்ளனர்.

யுனைடெட்-செவிய்யா குழுக்களுக்கு இடையிலான காலிறுதிக்கு முந்திய சுற்றின் முதல் ஆட்டம் 0-0 எனச் சமநிலையில் முடிந்தது. இதையடுத்து, நேற்று அதிகாலை நடந்த ஆட்டத்தில் வென்றால் மட்டுமே காலிறுதிக்கு முன்னேறலாம் என்ற இக்கட் டான நிலையில் யுனைடெட் குழு இருந்தது. முற்பாதி ஆட்டம் கோலேதுமின்றி முடிந்தது. ஆயினும், இரண்டாம் பாதியில் மாற்று வீரராகக் களமிறங்கி ஆட்டத்தின் போக்கையே மாற்றியமைத்தார் செவிய்யா குழுவின் மாற்று வீரர் விஸாம் பென் யெடர்.

ஆட்டத்தின் 72வது நிமிடத்தில் திடல் புகுந்த யெடர், 74வது, 77வது நிமிடங்களில் இரண்டு கோல்களைப் புகுத்த, அரங்கமே அதிர்ச்சியில் உறைந்தது. 84வது நிமிடத்தில் மார்க்கஸ் ரேஷ்ஃபர்ட் அனுப்பிய பந்தை ரொமேலு லுக்காகு கோலாக மாற்றியபோதும் அது யுனைடெட்டுக்கு ஆறுதல் அளிப்ப தாக மட்டுமே அமைந்தது.

காலிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற முடியாமல் போனதை எண்ணி நொந்துகொள்ளும் மான்செஸ்டர் யுனைடெட் குழுவின் தாக்குதல் ஆட்டக்காரர் அலெக்சிஸ் சான்செஸ்.