கேப்டவுன்: ஆஸ்திரேலிய கிரிக் கெட் அணிக்கெதிரான இரண்டா வது டெஸ்ட் போட்டியின்போது திடலில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடாவுக்கு இரு ஆட்டங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அனைத்துலக கிரிக்கெட் மன்றத்தின் (ஐசிசி) இந்த முடிவைக் கடுமையாக விமர்சித்துள்ளார் அந்த அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பால் ஹாரிஸ். போதாதற்கு, இந் திய கிரிக்கெட் அணித்தலைவர் விராத் கோஹ்லியையும் தேவை இல்லாமல் இழுத்துவிட்டுள்ளார். "தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது இந்திய அணித்தலைவர் கோஹ்லி திடலில் கோமாளிபோல நடந்து கொண்டார். ஆயினும், ஐசிசி அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, ரபாடா வையும் தென்னாப்பிரிக்க அணி யையும் குறிவைத்து அது செயல் படுவதாகத் தெரிகிறது," என்று ஹாரிஸ் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். இதற்கிடையே, தமக்கு விதிக் கப்பட்ட தடையை எதிர்த்து ரபாடா மேல்முறையீடு செய்துள்ளார்.
கோஹ்லியை வம்புக்கு இழுக்கும் முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர்
1 mins read

