சாம்பியன்ஸ் லீக்கில் மெஸ்ஸி சதம்

2 mins read
074863f7-0a55-440e-82e4-8ca932cdfbaf
-

பார்சிலோனா: சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டிகளில் நூறு கோல்களை அடித்த இரண்டாவது ஆட்டக்காரர் எனும் சாதனையைப் புரிந்துள்ளார் பார்சிலோனா குழுவிற் காக விளையாடி வரும் அர்ஜெண் டினாவின் லயனல் மெஸ்ஸி. செல்சி=பார்சிலோனா குழுக்கள் மோதிய காலிறுதிக்கு முந்திய சுற்றின் முதல் ஆட்டம் 1-1 எனச் சமநிலையில் முடிந்தது. இதையடுத்து, பார்சிலோனாவின் நூ காம்ப் அரங்கில் நேற்று நடந்த 2வது ஆட்டத்தில் வென்று கால் இறுதிக்குள் நுழையும் முனைப்புடன் இரு குழுக்களும் இருந்தன. ஆயினும், ஆட்டத்தின் தொடக் கத்திலேயே பார்சிலோனா தனது வல்லமையை நிரூபித்தது. ஆட்டம் தொடங்கி 2 நிமிடம் 8 வினாடிகளில் அக்குழுவின் முதல் கோலைப் போட்டார் மெஸ்ஸி. தொழில்முறை காற்பந்து ஆட்டக் காரராக இதுவரை 602 கோல்களை அடித்துள்ள மெஸ்ஸியின் அதிவேக கோல் இதுதான்.

அதன்பின், 20வது நிமிடத்தில் மெஸ்ஸி அனுப்பிய பந்தை மிக நேர்த்தியாக வலைக்குள் தள்ளினார் பார்சிலோனாவின் இளம் ஆட்டக் காரர் உஸ்மான் டெம்பெலே. இடைவேளைக்குப் பின் மெஸ்ஸி யின் மந்திரக் கால்கள் மூலம் பார்சிலோனாவுக்கு இன்னொரு கோல் கிடைத்தது. முதல் கோலைப் போலவே இம்முறையும் கோல் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தார் லூவிஸ் சுவாரெஸ். அத்துடன், முதன்முறை போன்றே இம்முறை யும் மெஸ்ஸி உதைத்த பந்து செல்சி கோல்காப்பாளர் கோர்ட்டு வாவின் கால்களுக்கு இடையே புகுந்து வலையை முத்தமிட்டது.

செல்சி குழுவிற்கு எதிரான ஆட்டத்தில் பார்சிலோனாவின் மூன்றாவது கோலை அடிக்கும் லயனல் மெஸ்ஸி (வலது). இதுவே சாம்பியன்ஸ் லீக்கில் இவரது நூறாவது கோல். படம்: ராய்ட்டர்ஸ்