ஒருநாள் போட்டி அனைத்துலக அணி என்ற தகுதி பெற்றது நேப்பாளம்

ஒருநாள் போட்டி அனைத்துலக அணி என்ற தகுதி பெற்றது நேப்பாளம்

1 mins read

ஐசிசி உலகக் கிண்ணக் கிரிக்கெட் தகுதிச் சுற்றுப் போட்டியில் நெதர்லாந்து அணி 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஹாங்காங் அணியை வீழ்த்தியதையடுத்து நேப் பாளத்துக்கு ஒருநாள் அனைத் துலக அணி தகுதி கிடைத்தது. நெதர்லாந்து அணி 2022 வரை ஒருநாள் அனைத்துலக அணி தகுதியை ஏற்கெனவே பெற்றுவிட்டதால் நெதர்லாந்து அணியின் இந்த வெற்றி மூலம் ஹாங்காங் அணியைப் பின்னுக்குத் தள்ளி நேப்பாளம் ஒருநாள் கிரிக் கெட் அணி தகுதியைப் பெற்றது. அசோசியேட் அணிகளில் 3வது இடம் பிடித்ததால் நேப்பாளத் துக்கு இந்த ஒருநாள் அனைத் துலக அணி தகுதி வழங்கப் பட்டுள்ளது. ஹாங்காங், பாப்புவா நியூகினி ஆகியவை ஒருநாள் அனைத்துலக அணி என்ற தகுதியை இழந்துவிட்டன.