காலிறுதியில் லிவர்பூல்-சிட்டி

1 mins read

நியோன்: சாம்பியன்ஸ் லீக் காற்பந்தின் காலிறுதிச் சுற்றில் இங்கிலிஷ் குழுக்களான மான் செஸ்டர் சிட்டியும் லிவர்பூலும் மோதவுள்ளன. காலிறுதிச் சுற்றில் இரு இங் கிலிஷ் குழுக்கள் பொருதுவது ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இதுவே முதன்முறை. முன்னதாக, 2010=11 பருவத்தில் செல்சியும் மான்செஸ்டர் யுனைடெட்டும் எதிர்த்தாடின. இந்த மோதல் குறித்து கருத் துரைத்த சிட்டி குழுவின் இயக் குநர் டிஸிகி பெகிரிஸ்டைன், "இரு குழுக்களும் ஒன்றை ஒன்று நன்கு அறிந்து வைத்து உள்ளன. லிவர்பூல் தாக்குதலில் வல்லமை பொருந்திய குழு என் பதால் அதனுடன் மோதவிருக்கும் இரு ஆட்டங்களும் காற்பந்து ரசிகர்களுக்கு நல்விருந்தாக அமையும்," என்றார்.

அடுத்த மாதம் 3 அல்லது 4ஆம் தேதியில் லிவர்பூலின் ஆன்ஃபீல்ட் விளையாட்டரங்கில் இவ்விரு குழுக்களும் காலிறுதிச் சுற்றின் முதல் ஆட்டத்தில் விளையாடும்.