அரையிறுதியில் பி.வி.சிந்து

அரையிறுதியில் பி.வி.சிந்து

1 mins read

பர்மிங்ஹம்: முன்னணி இந்திய வீராங்கனையான பி.வி.சிந்து அனைத்து இங்கிலாந்து பேட்மிண்டன் தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். ஒலிம்பிக்கில் வெள்ளி வென்றவரான சிந்து, காலிறுதி ஆட்டத்தில் ஜப்பானின் நொஸே„மி ஒக்குஹாராவை 20-22, 21-18, 21-18 என்ற செட் கணக்கில் போராடி வீழ்த்தினார். இந்த ஆட்டம் ஒரு மணி நேரம் 24 நிமிடங்களுக்கு நீடித்தது. ஒக்குஹாராவை சிந்து வெற்றிகொண்டது இது ஐந்தாவது முறை.

இன்று நடக்கவுள்ள அரையிறுதியில் உலகின் மூன்றாம் நிலை வீராங்கனையான சிந்து, தமக்கு முந்திய நிலையிலுள்ள ஜப்பானின் அகானே யமாகுச்சியை எதிர்த்தாடுகிறார். ஆடவர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனோய் 20-22, 21-16, 23-21 என்ற செட் கணக்கில் சீனாவின் ஹுவாங் யுச்சியாங்கிடம் தோற்று வெளியேறினார்.