ஓய்வை அறிவித்தார் கெவின் பீட்டர்சன்

ஓய்வை அறிவித்தார் கெவின் பீட்டர்சன்

1 mins read
229dd83e-4657-44c2-86a9-2410ed1a8bc1
-

லண்டன்: முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன், 37 (படம்), கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். கடைசியாக பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் (பிஎஸ்எல்) குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணி சார்பாக விளையாடிய பீட்டர்சன், "பூட்ஸ் அப்! நன்றி!" என்று நேற்று முன்தினம் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். குவெட்டா அணி அடுத்த சுற்றுக்குத் தகுதிபெற்றுவிட்டது.

இருந்தாலும் நடப்பு பிஎஸ்எல்லில் எஞ்சியுள்ள போட்டிகள் பாகிஸ் தானில் நடைபெறும் என்பதால் கடந்த வியாழக்கிழமை இஸ்லாமா பாத் யுனைடெட் அணிக்கெதிரான போட்டியே, தொழில்முறை ஆட்டக் காரராக பீட்டர்சன் பங்கேற்ற கடைசி ஆட்டமாக அமைந்தது.