அத்துமீறிய ஆட்டக்காரர்கள்

அத்துமீறிய ஆட்டக்காரர்கள்

1 mins read
4b5a0157-d8fb-41f8-a856-b03adcf1e68e
-

கொழும்பு: முத்தரப்பு டி20 கிரிக் கெட் தொடரில் இலங்கை-பங்ளா தேஷ் அணிகள் மோதிக்கொண்ட இறுதி லீக் ஆட்டத்தில் ரசிகர்களை முகம் சுளிக்கும்படியான விரும்பத் தகாத நிகழ்வுகள் அரங்கேறின. இந்திய அணி ஏற்கெனவே இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்று விட்ட நிலையில், அதனுடன் மோதப்போகும் அணி என்பதைத் தீர்மானிப்பதாக அமைந்தது நேற்று முன்தினம் நடந்த இறுதி லீக் ஆட்டம்.

இந்தப் போட்டியில் முதலில் பந்தடித்த இலங்கை 41 ஓட்டங் களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆயினும், குசால் பெரேரா (61), திசர பெரேரா (58) ஆகியோர் கைகொடுக்க, அந்த அணி 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 159 ஓட்டங் களை எடுத்தது.

அடுத்து பந்தடித்த பங்ளாதேஷ் வெற்றியை நோக்கி நிதானமாக முன்னேறியபோதும் இடையில் சில விக்கெட்டுகளை இழந்ததால் கடைசி நேரத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

வாக்குவாதம் செய்யும் பங்ளாதேஷ் அணியின் மாற்று ஆட்டக்காரர் நூருல் ஹசன் (இடமிருந்து 2வது). - படம்: ஏஎஃப்பி