ஐஎஸ்எல்: இரண்டாவது முறையாக கிண்ணம் வென்றது சென்னை

1 mins read
ccaa05b6-1dd7-4c27-b743-afa19278f1d9
-

பெங்களூரு: இந்தியன் சூப்பர் லீக் காற்பந்துத் தொடரின் இறுதி ஆட்டத்தில் பெங்களூரு அணியை 3=2 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய சென்னை அணி இரண் டாவது முறையாக கிண்ணத்தைக் கைப்பற்றியது. இந்தியன் சூப்பர் லீக் தொட ரின் நான்காவது பருவம் கடந்த நவம்பர் 17ஆம் தேதி தொடங்கியது. பெங்களூரு அணி தனது முதல் பருவத்திலேயே 13 வெற்றி களைக் குவித்து பட்டியலில் முத லிடத்தை பிடித்தது. அரையிறுதிச் சுற்றில் 3-1 என புனே அணியைத் தோற்கடித்தது. இந்த பருவத்தில் 9 வெற்றி களுடன் 2015ஆம் ஆண்டு வெற் றியாளரான சென்னை அணி, பட்டியலில் 2வது இடத்தைப் பிடித் தது. அரையிறுதியில் 4-1 என்ற கோல் கணக்கில் கோவாவைப் புரட்டியெடுத்தது. இந்த இரு அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி நேற்று முன்தினம் இரவு பெங்களூ ருவில் உள்ள கான்டீரவா விளை யாட்டரங்கில் நடைபெற்றது.

ஐஎஸ்எல் காற்பந்துக் கிண்ணத்தைக் கைப்பற்றிய மகிழ்ச்சியில் சென்னை அணி வீரர்கள். படம்: ஊடகம்