மெஸ்ஸி ஆட்டத்தை நினைவூட்டிய சாலாவின் கோல்

மெஸ்ஸி ஆட்டத்தை நினைவூட்டிய சாலாவின் கோல்

1 mins read
ef7a145c-9ee7-43c9-a996-4d1512252701
-

லிவர்பூல்: பார்சிலோனா நட்சத் திரம் மெஸ்ஸியோடு ஒப்பிடும் வகையில், லிவர்பூல் காற்பந்து வீரர் முகமது சாலா முன்னேறி வருவதாகக் கூறியுள்ளார் லிவர் பூல் நிர்வாகி கிளோப். நேற்று அதிகாலை நடந்த இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டத் தில் வாட்ஃபர்ட் குழுவை 5-0 என்று வீழ்த்தியது லிவர்பூல். அதில் நான்கு கோல்களுக்கு சொந்தக்காரரானர் 25 வயது லிவர்பூல் வீரர் சாலா. இதுதவிர ஃபெர்மினோ ஒரு கோல் போட வும் அவர் உதவியாக இருந்தார். தற்போதைய பருவத்தில் அவர் போட்ட 36ல் 28 கோல்கள் பிரிமியர் லீக் ஆட்டங்களில் விழுந்தவையாகும். இதன் மூலம் முக்கிய ஐரோப் பிய காற்பந்து லீக் தொடர்களில், அதிக கோல்களைப் போட்டவர் என்ற பெருமைக்கு உரியவரானார் சாலா. படம்: ஏஎஃப்பி