மான்செஸ்டர்: பிரைட்டன் காற் பந்துக் குழுவை வீழ்த்திய மான் செஸ்டர் யுனைடெட் எஃப்ஏ கிண்ணக் காற்பந்துத் தொடரின் அரையிறுதிக்கு முன்னேறியது. கடந்த வாரம் செவ்வியாவிடம் தோற்று சாம்பியன்ஸ் லீக் தொட ரில் இருந்து வெளியேறிய மான் செஸ்டர் யுனைடெட் குழுவிற்கு இந்த வெற்றி முக்கியமானது. ஏனெனில், இபிஎல் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் மேன்யூவிற்கு இப்பருவத்தில் கிண்ணம் வெல்வதற்கு இருக்கும் ஒரே வாய்ப்பு எஃப்ஏ கிண்ணம் தான்.
செவ்வியாவிடம் அடைந்த தோல்வியின் எதிரொலியாக மேன்யூ நிர்வாகி மொரின்யோ, நேற்று அதிகாலை நடந்த இந்த ஆட்டத்தில் முக்கிய மாற்றங் களைச் செய்திருந்தார். அதில் அலெக்சிஸ் சான்செஸ் களமிறக்கப்படாததும் போக்பாவை மாற்று ஆட்டக்காரர்கள் வரிசை யில் அமர்த்தியதும் குறிப்பிடும் படியான மாற்றங்களாக இருந்தன. இதன் தாக்கம் விளையாட்டில் ஓரளவு பிரதிபலித்தாலும் அவர்கள் விளையாடிய விதம் திருப்தியளிக் கும் வகையில் இல்லை என்று கூறியுள்ளார் மொரின்யோ. "நாங்கள் இந்த வெற்றிக்கு உகந்தவர்கள்தான். ஆட்டத்தை எங்களின் கட்டுப்பாட்டில்தான் வைத்திருந்தோம். ஆனால் நன் றாக விளையாடவில்லை.
பிரைட்டன் குழுவிற்கு எதிராக மான்செஸ்டர் யுனைடெட்டின் வெற்றியை உறுதி செய்த கோலைப் போட்டார் நிமான்யா மேட்டிச். படம்: ராய்ட்டர்ஸ்

