லாஸ் ஏஞ்சலிஸ்: மூன்று வெற்றிப் புள்ளிகளை முறியடித்து, பின் ஆட்டத்தையே வென்று, உலகின் முதல் நிலை டென்னிஸ் வீரரான ரோஜர் ஃபெடரரின் வெற்றிப் பய ணத்தைத் தடுத்து நிறுத்தினார் அர்ஜெண்டினாவின் யுவான் மார்ட்டின் டெல் போட்ரோ. இண்டியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் தொடரின் இறுதிப் போட்டியில் டெல் போட்ரோ 6-4, 6-7, 7-6 என்ற செட் கணக்கில் ஃபெடரரை வீழ்த்தி பட்டத்தை வென்றார்.
தொடர்ந்து 17 ஆட்டங்களில் வெற்றி கண்டு வந்த ஃபெடரருக்கு இவ்வாண்டில் கிட்டிய முதல் தோல்வி இதுதான். போட்டிக்குப் பின் பேசிய டெல் போட்ரோ, 'இன்னும் நான் அதிர்ச் சியில் இருந்து மீளவில்லை. இன் னும் பதற்றமாகவே இருக்கிறது. இந்த வெற்றியை வார்த்தைகளால் விவரிக்க இயலவில்லை. எல்லாம் கனவுபோல இருக்கிறது,' என்றார். இதற்குமுன் ஃபெடரருடன் 24 முறை மோதியுள்ளபோதும் அவற் றில் ஆறு முறை மட்டுமே வென்று இருந்த டெல் போட்ரோ, மாஸ்டர்ஸ் தொடரை வென்றது அற்புதமான அனுபவம் என்றும் சொன்னார்.

