செல்சியை காத்த பெட்ரோ

செல்சியை காத்த பெட்ரோ

1 mins read
b9712280-ef16-4f6f-8102-81fc6e2b1ea8
-

லெஸ்டர்: மாற்று ஆட்டக்காரராக வந்த ஸ்பெயினின் பெட்ரோ ரோட்ரிகெஸ் (படம்) கூடுதல் நேரத்தில் அடித்த கோலால் செல்சி காற்பந்துக் குழு எஃப்ஏ கிண்ண அரையிறுதிக்கு முன்னேறியது. கிங் பவர் விளையாட்டரங்கில் நேற்று முன்தினம் பின்னிரவில் செல்சி-லெஸ்டர் சிட்டி குழுக்கள் மோதிய காலிறுதிப் போட்டி, ஆட்ட நேரமான 90 நிமிடங்களில் 1=1 எனச் சமநிலையில் முடிந்தது. அல்வாரோ மொராட்டா 42வது நிமிடத்தில் கோலடிக்க, 76வது நிமிடத்தில் பதில் கோலடித்து ஆட்டத்தைச் சமனுக்குக் கொண்டு வந்தார் லெஸ்டரின் வார்டி. இதனால் ஆட்டம் கூடுதல் நேரத்திற்குச் சென்றது.

அதில், 15வது நிமிடத்தில் கான்டே அனுப்பிய பந்தைத் தலையால் முட்டி கோலாக்கி, செல்சிக்கு வெற்றி தேடித் தந்தார் பெட்ரோ. ஏழு முறை எஃப்ஏ கிண்ண வெற்றியாள ரான செல்சி, 1997, 2000, 2012 ஆகிய ஆண்டுகளிலும் லெஸ்டரை வென்றிருந் தது. அப்போதெல்லாம் செல்சியின் கை களுக்கே கிண்ணம் சென்று சேர்ந்தது குறிப்பிடத்தக்கது. அரையிறுதியில் செல்சி, சௌத்ஹேம்டனுடனும் மான்செஸ்டர் யுனை டெட், டோட்டன்ஹம் ஹாட்ஸ்பருடனும் மோதவுள்ளன. படம்: ராய்ட்டர்ஸ்