சென்னை: இலங்கையில் நடை பெற்ற முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடரை இந்தியா கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்த தினேஷ் கார்த்திக் (படம்) அணியில் கடும் போட்டி நிலவுவதாகக் கூறியுள்ளார். இத்தொடருக்குப் பிறகு சென்னை திரும்பிய அவர் பத்திரிகையாளர்களைச் சந் தித்தபோது, "இக்கட்டான நேரங்களில் நிதானத்தைக் கையாள வேண்டும். இதற்கு டோனியின் ஆட்டங்கள் சிறந்த உதாரணம். "ஒரு ஆட்டத்தை எப்படி வெற்றிகரமாக முடிக்க வேண் டும் என்பதை மகேந்திர சிங் டோனியிடம் இருந்து கற்றுக் கொண்டேன். தற்போது இந்திய அணியில் இடம்பிடிக்க கடும் போட்டி நிலவு கிறது. அனைத்து வீரர்க ளும் சிறப்பாக விளையாடு கின்றனர்.
"இந்திய அணியில் இடம் கிடைத்தால் அதைத் தக்க வைப்பது மிகக் கடினம். சிறப் பான ஆட்டத்தை வெளிப்படுத்தி னால் மட்டுமே இந்திய அணி யில் தொடர்ந்து நீடிக்க முடியும். "ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட வேண்டும் என்பதே நீண்ட நாள் விருப்பம். "ஆனால், எந்தெந்த வீரர்கள் எந்த அணியில் விளையாட வேண்டும் என்பதை ஐபிஎல் ஏலம் தான் முடிவு செய்யும். "தமிழ்நாட்டில் பிறந்த நான், இதுவரை தமிழக அணியைத் தவிர வேறு எந்த அணிக்காகவும் விளையாடியதில்லை. "சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் கிடைக்காதது வருத்தம்தான்," என்றார்.

