போர்ட் எலிசபத்: தடை நீக்கப்பட்ட தென்னாப்பிரிக்க வீரர் ரபாடா ஆஸ்திரேலியாவிற்கு எதிராக வரும் வெள்ளியன்று தொடங்க வுள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டி யில் சிம்ம சொப்பனமாக விளங்கு வார் என்கிறார்கள் ரசிகர்கள். தென்னாப்பிரிக்காவிற்கு எதி ரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரபாடாவின் அபார பந்துவீச்சில் ஆஸ்திரேலிய பந்த டிப்பாளர்கள் ஆட்டமிழந்தனர். 11 விக்கெட்டுகளைச் சாய்த்து ஆஸ்திரேலிய அணியைத் தோல் வியை நோக்கி வழிநடத்தினார் ரபாடா.
அப்போது ஆஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டை வீழ்த்திய பிறகு, அவர் மீது மோதியதாக எழுந்த குற்றச்சாட்டில் தென்னாப்பிரிக்கா வின் நட்சத்திர வேகப்பந்து வீச் சாளர் ரபாடாவுக்கு 2 போட்டி களில் விளையாட விதிக்கப்பட் டது. இதில் உடல் மோதல் என்பது இரண்டாம் நிலை குற்றச்சாட்டாக எடுத்துக்கொள்ளப்பட்டு மூன்று தகுதி இழப்புப் புள்ளிகள் வழங்கப் பட்டது. ஏற்கெனவே ஐந்து புள்ளிகள் இருப்பதால் இரண்டு டெஸ்டில் விளையாடத் தடைவிதிக்கப் பட்டது. இந்தத் தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்தார் ரபாடா.

